News August 23, 2025

தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

image

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 2, 2026

தந்தை – மகன் போட்டி உருவாகுமா?

image

ராமதாஸ் தரப்பில் பென்னாகரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சிட்டிங் MLA ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்.,கில் இணைந்த நிலையில், அவரே அங்கு போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் மகனை எதிர்த்து களமிறங்குவதா என ஜி.கே.மணி யோசிப்பதால், அத்தொகுதியில் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன முடிவெடுப்பார் ராமதாஸ்?

News April 2, 2026

சின்னம்மையில் இருந்து பாதுகாத்து கொள்ள..

image

வெயிலின் தாக்கத்தால், தமிழகத்தில் <<19543883>>சின்னம்மை <<>>பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது காற்று மூலமாக, வைரஸ் வழியாக எளிதாக ஒருவருக்கு ஒருவர் பரவுகிறது. இந்த கொடிய பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, டாக்டர்கள் கூறும் டிப்ஸை தொகுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். இந்த விழிப்புணர்வு பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.

News April 2, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் தலைகீழாக 2.5%(120 டாலர்கள்) குறைந்துள்ளது. அதன் எதிரொலியால், சென்னையில் இன்று கிராமுக்கு ₹100 குறைந்து ₹13,950-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹800 குறைந்து ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் பிற்பகலிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!