News August 16, 2024
3 மாநிலத் தேர்தல் அட்டவணை இன்று வெளியீடு

மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா சட்ட மன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை EC இன்று வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பை EC தலைமை ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று மதியம் 3 மணிக்கு வெளியிடவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப். 30க்குள் தேர்தல் நடத்த SC கெடு விதித்திருப்பதால், அதுகுறித்த அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
Similar News
News January 10, 2026
2026 இல்லை.. இன்னும் 2018-ல் தான் இருக்காங்க!

உலகமே 2026-ம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு நாடு மட்டும் இன்னும் 2018-லேயே இருக்கிறது. ஆம், எத்தியோப்பியாவில் கீஸ் நாள்காட்டி பின்பற்றப்படுவதால் அங்கு தற்போது 2018 தான். இந்த நாள்காட்டியில் 13 மாதங்கள் இருப்பதால்தான் எத்தியோப்பியா 7 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. அதேபோல அங்கு செப்.11 அல்லது செப்.12-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. SHARE.
News January 10, 2026
கருத்து சுதந்திரம் அழிவில் உள்ளதா?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் ஹிந்தி திணிப்பு, திராவிட இயக்க காட்சிகள் அதிகளவில் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், விஜய்யின் அரசியல் வருகையால் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸை சென்சார் வேண்டுமென்றே தாமதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்தையும், கருத்து சுதந்திரத்தையும் பாதிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News January 10, 2026
மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, ➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும். ➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையுடன் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். ➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும். ➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.


