News October 24, 2024

மணல் மூட்டைகள் கடத்திய 3 பேர் கைது

image

காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று சிறுகாட்டூரில் உள்ள ராஜன் வாய்க்கால் கொள்ளிடக்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் கடத்தி வந்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38), ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (28), கருணாகர நல்லூரை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News November 24, 2025

கடலூர்: கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

image

திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்ல பெருமாள்(90). இவரது மனைவி அலமேலு (80). வயது மூப்பு காரணமாக செல்ல பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது இறுதி சடங்கு நடைபெற்ற போது, துக்கம் தாங்காமல் இருந்த அலமேலு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதி ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 24, 2025

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்யும் அனைத்து வகையான படகு உரிமையாளர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை பதிவு செய்திட வேண்டும். படகு ஆய்வின் அறிக்கை, உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய விவரம், உரிமையாளரின் முகவரி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் 30.11.2025 மீன்வளத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக முதலில் நான்கு தாலுகாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார், இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!