News March 25, 2024
அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு..

கடந்த இரண்டு நாட்களில் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் (57), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனியை சேர்ந்த பாண்டியன் (40) உயிரிழந்தனர். உடல் பரிசோதனை செய்யாமல் ரீல்ஸ் மோகத்தில் அதிகளவு இளைஞர்கள் மலையேற வருவதாகவும், மலை உச்சிக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News January 15, 2026
கோர ரயில் விபத்தில் 32 பேர் பலி.. 7 பேர் கவலைக்கிடம்

தாய்லாந்து ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 66 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். அதில், 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று காலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானிக்கு சென்ற <<18853608>>ரயில் மீது கிரேன் விழுந்ததில்<<>> பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 15, 2026
திமுகவை விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்!

ஆட்சியில் பங்கு என்பதை மீண்டும் வலியுறுத்தி, பொங்கல் வாழ்த்திலும் திமுகவை சீண்டியுள்ளார் மாணிக்கம் தாகூர். கேரள UDF மாடல் அதிகார பகிர்வுக்கு சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ள அவர், நட்பு+பங்கே அதன் அடித்தளம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு ‘பை-பை’ சொல்வதில்லை என்று தெரிவித்த அவர், 2026-ல் இந்த மாடல் வெல்ல வேண்டும் எனவும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 15, 2026
பொங்கல் ட்ரீட்: மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகள்!

தலைபொங்கல் என்றாலே மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் ராஜ உபசரிப்புதான். ஒவ்வொரு குடும்பத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு, பல வகையான உணவுகளை விருந்து வைத்து அசத்துவர். அந்த வரிசையில் இந்த பொங்கலுக்கு இவர்கள்தான் டாப்பு. ஆந்திராவின் தெனாலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது மாப்பிள்ளைக்கு சுமார் 158 வகை உணவுகளை பரிமாறி உள்ளனர். உங்க தலைபொங்கலுக்கு மாமனார் வீட்டில் என்ன விருந்து வெச்சாங்க?


