News April 15, 2025
சிவகாசியில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் விழாவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27), அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (75) நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, அவர்களது குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
61 வயதில் திருமணம் செய்யும் பாஜக EX எம்பி

61 வயதில் மே.வங்க பாஜக EX எம்பி திலிப் கோஷ் திருமணம் செய்ய இருப்பது, அந்த மாநில அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. ஆர்எஸ்எஸ்-காரரான திலிப் கோஷ் திருமணம் செய்யக்கூடாது என உறுதியாக இருந்தார். தற்போது அந்த முடிவை கைவிட்டு, 51 வயதான தெற்கு கொல்கத்தா பாஜக மகளிர் அணி தலைவி ரிங்கு மஜூம்தாரை நாளை திருமணம் செய்கிறார். 2 பேரும் நடைபயிற்சியில் அறிமுகமாகியுள்ளனர். இதை திருமணமாக்க முடிவு செய்துள்ளனர்.
News April 17, 2025
நாங்கள் ஹிந்தியர்கள் கிடையாது: ராஜ் தாக்கரே

மஹாராஷ்டிர பள்ளிகளில் 3ஆவது மொழியாக ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்பை நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். தாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் இல்லை எனவும், ஹிந்தி தேசிய மொழி இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் வெற்றிக்காக மராத்தியர்கள்- மராத்தி அல்லாதவர்களுக்கு இடையே அரசு மோதலை உருவாக்குவதாகவும் சாடியுள்ளார்.
News April 17, 2025
26 பந்துகளில் சதம்.. 24 சிக்ஸர்களை விளாசிய வீரர்

ஐரோப்பிய கிரிக்கெட் தொடரில் (T10) புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிவிட்டாவெச்சியா அணிக்கு எதிரான போட்டியில், மிலன் வீரர் ஜையின் நக்வி, வெறும் 26 பந்துகளில் சதம் விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். 24 சிக்ஸர், 2 ஃபோர் என 37 பந்துகளில் 160* ரன்களை அடித்தார். 8, 10-வது ஓவர்களில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசினார்.