News May 22, 2024
பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள் கட்டத் தடை, பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல், பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளது.
Similar News
News August 30, 2025
முதல்வரை விஜய் அப்படி சொல்லி இருக்கக்கூடாது: அமீர்

நடிகராக ‘அங்கிள்’ என்று சொல்வது தவறில்லை; ஆனால் ஒரு கட்சியின் தலைவராக ‘மாண்புமிகு முதல்வர்’ என அழைப்பது தான் சரி, விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். TVK மாநாட்டில் ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில், விஜயை குற்றவாளியாக சேர்த்தது போலீஸின் செயல்பாட்டை கேள்விக் குறியாக்குகிறது எனக் கூறிய அவர், ரசிகர் – விஜய் இடையேயான பிரச்சனையில் பொதுவிவாதம் தேவையில்லை என்றார்.
News August 30, 2025
நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் ‘சிம்ஹாசனம்’

✦முதுகு வலியை போக்க உதவுகிறது.
➥முதலில், தரையில் முழங்கால்களை மடக்கி, அடிப்பாதங்கள் மேல்நோக்கி இருக்குமாறு அமரவும்.
➥உடலுக்கு முன்னால் இரு கைகளையும் தரையில் வைக்கவும்.
➥கால்கள் மடங்கிய நிலையிலேயே இருக்க, முதுகை முன்னோக்கி சாய்க்கவும்.
➥நாக்கை வெளியே நீட்டி மூச்சை வாயில் விடவும்.
➥இந்த நிலையில் 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 30, 2025
தல டக்கர் டோய்.. மாஸ் லுக்கில் AK!

கார் ரேஸிங்கில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தியுள்ள அஜித் குமார், பல்வேறு தொடர்களிலும் வெற்றி வாகை சூடி வருகிறார். அதே நேரத்தில், தனது கெட்டப்பையும் அடிக்கடி மாற்றி வருகிறார். அவரின் சமீபத்திய கிளிக்ஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ‘இதே கெட்டப்பில் ஒரு படம் பண்ணுங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த லுக் அஜித்துக்கு எப்படி இருக்கு?