News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News November 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 534 ▶குறள்: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. ▶பொருள்: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
News November 29, 2025
அப்போ ட்ரோல், இப்போ பாராட்டு: லிங்குசாமி

சூர்யாவின் ‘அஞ்சான்’ நேற்று ரீரிலீஸானது. இந்நிலையில், இப்படம் முதலில் ரிலீஸானபோது பலரும் ட்ரோல் செய்ததாக அதன் இயக்குநர் லிங்குசாமி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த படத்தையா ட்ரோல் செய்தார்கள் என தற்போது பலர் தன்னிடம் கூறியதாக நெகிழ்ந்துள்ளார். மேலும், தான் இயக்கிய மேலும் சில படங்களை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் எந்த படத்தை ரீரிலீஸ் செய்யலாம்?
News November 29, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


