News August 3, 2024
சர்க்கரை குறித்த 3 கட்டுக்கதைகள்..!

சர்க்கரை குறித்த கட்டுக்கதைகள் மக்களிடத்தில் நிறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *சர்க்கரையை உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் என்பது பொதுவான கட்டுக்கதை. *செயற்கை இனிப்புகள் ஆரோக்கியமானது என்பதும் பொய் என்கிறார்கள். இவை நீரிழிவு மற்றும் புற்றுநோயை உண்டாக்கலாம். *உடல் எடையை குறைக்க சிலர் சர்க்கரையை தவிக்கிறார்கள். ஆனால், சர்க்கரையை போதுமான அளவில் சாப்பிடாததும் பிரச்னை என்கிறார்கள்.
Similar News
News November 16, 2025
₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை: அடடே அரசு திட்டம்!

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக ஆகிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
News November 16, 2025
பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.


