News November 24, 2024
உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலி

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சம்பலில் உள்ள பழமையான மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 30 போலீசாரும் காயமடைந்தனர்.
Similar News
News December 2, 2025
பயிர் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹35,000 வழங்குக: வீரபாண்டியன்

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.22 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய கம்யூ. கட்சியின் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடாக தர வேண்டும் என TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடு, மாடு இறப்புக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
News December 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 537 ▶குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
▶பொருள்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
News December 2, 2025
விஜய்க்கு அறிவுரை சொல்லமாட்டேன்: கமல்

அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் பற்றி விஜய்க்கு அறிவுரை சொல்வீர்களா என்ற கேள்விக்கு, அறிவுரை சொல்லும் இடத்தில் தான் இல்லை என்றும், தனது தம்பிக்கு (விஜய்) அறிவுரை வழங்குவதற்கு இதுசரியான தருணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனுபவத்திற்கு சார்பு கிடையாது என்பதால், அது உங்களுக்கு தேவையானதை கற்றுக்கொடுக்கும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.


