News March 27, 2025
கோர விபத்தில் 3 பேர் பலி

கவுஹாத்தியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில், சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோனாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வாகனம் டிரக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். சாலையோரம் பல வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Similar News
News March 30, 2025
பறக்கும் செவ்வாய்: பண மழையில் 3 ராசிகள்!

துணிச்சல் குணத்தின் அதிபதியான செவ்வாய், வரும் 3ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்வதால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்கிறது. 1) கடகம்: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்குபவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். 2) சிம்மம்: நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். 3) கன்னி: எதை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும்.
News March 30, 2025
வருத்தம் தெரிவித்தார் மோகன் லால்

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சையான காட்சி குறித்து நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். குஜராத் கலவரம் பற்றிய காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றதாகக் கூறி, வலது சாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இருப்பினும், பகையை விதைக்கும் எண்ணம் இல்லையென மோகன்லால் பேஸ்புக் பதிவு செய்திருக்கிறார்.
News March 30, 2025
கிட்னியை பாதுகாக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை?

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பான கிட்னியை பாதுகாக்கும் ஒரே பொருள் தண்ணீர்தான். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கிட்னி செயலிழந்துவிடும். இந்நிலையில், கிட்னியை பாதுகாக்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் (8-10 கிளாஸ்) குடிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை குடிப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.