News June 23, 2024

பாஜகவில் இருந்து 3 முக்கிய நிர்வாகிகள் நீக்கம்

image

தமிழக பாஜகவில் இருந்து 3 முக்கிய நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்டப் பொதுச்செயலாளர் செந்திலரசன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கல்யாணராமன், சூர்ய சிவா உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

பாலூட்டும் தாய்மார்கள் இதை மறக்க வேண்டாம்!

image

தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால், பால் சுரப்பது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 8 முறை வரை குழந்தைகளுக்கு பாலூட்டலாம். நீரிழப்பு தாய்ப்பால் சுரப்பை தடுக்கும். அதனால், உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஓட்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு, பாதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவும். தாய்ப்பால் கொடுக்காத சமயத்தில் பிரெஸ்ட் பம்ப் கருவியை பயன்படுத்துங்கள். SHARE IT.

News September 13, 2025

தாலிபான் தாக்குதலில் 12 பாக்., ராணுவ வீரர்கள் பலி

image

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தானில், ராணுவ வாகனத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் இருந்தும், கடும் தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எதிர்பாராத தாக்குதல் என்பதால் ராணுவத்தினரால் எந்த பதிலடியும் கொடுக்க முடியாமல், 12 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய கும்பல் ராணுவத்தின் ஆயுதங்களுடன் அங்கிருந்த தப்பியது. தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ – தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

News September 13, 2025

விஜய் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படாது: திருமா

image

விஜய் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்காக வரும் லட்சக்கணக்கானோர் அரசியல் சக்திகளாக மாறுவார்கள் எனத் தெரிவித்த அவர், விஜய்க்காக திரண்டவர்கள் அப்படி இல்லை எனக் குறிப்பிட்டார். ஏதோ திட்டமிடப்பட்ட அஜெண்டாவிற்காக அவர் அரசியலுக்கு வந்திருக்கலாம் எனவும் திருமா தெரிவித்தார்.

error: Content is protected !!