News September 3, 2025

விஜய்யுடன் இணைய போகும் 3 முக்கிய தலைவர்கள்?

image

சசிகலா, OPS-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி மேற்கொண்டதால்தான் செங்கோட்டையன் – EPS இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. EPS விடாப்பிடியாக இருப்பதால் மீண்டும் இணைப்புக்கு சாத்தியமில்லை என தெரிகிறது. ஏற்கெனவே TTV, OPS ஆகியோர் தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என பேசப்படுகிறது. செங்கோட்டையனும் விஜய்யுடன் இணைந்தால், கொங்கு, தென்மாவட்டங்களில் தவெக பலம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 3, 2025

செங்கோட்டையனுடன் இணைந்தார் முன்னாள் எம்பி

image

இபிஎஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக செங்கோட்டையனை அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா சந்தித்து ஆலோசனை செய்தார். இதன்பின் பேசிய செங்கோட்டையன், நாளை மறுநாள் சரியாக காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன், அப்போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

மத்திய அரசில் ₹1.40 லட்சம் சம்பளத்துடன் வேலை

image

தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் (NHPC) காலியாகவுள்ள ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 248 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: B.E., (சில பதவிகளுக்கு மாறுபடுகிறது). அதிகபட்சமாக 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹27,000 – ₹1.40 லட்சம். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.1. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News September 3, 2025

BREAKING: இனி பெப்சி, கோக், KFC விற்பனை கிடையாது

image

இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்கவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இனி பெப்சி, கோக், KFC போன்ற அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வாட்டர் பாட்டில்களையும் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படாது. அதேபோல், ஸ்விகி, சொமோட்டோ நிறுவனங்களையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!