News April 16, 2025
அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் 3 ஹீரோயின்கள்?

அல்லு அர்ஜுனுடன் இணைந்து பிரம்மாண்டமான படத்தை இயக்கும் பணியை அட்லீ தொடங்கியுள்ளார். புஷ்பா – 2 வெற்றிக்கு பின் அல்லுவும், ஜவான் வெற்றிக்கு பின் அட்லீயும் இப்படத்தில் கூட்டணி அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஜான்வி கபூர், திஷா பதானி மற்றும் ஷரத்தா கபூர் ஆகியோருடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 6, 2025
PM மோடியுடன் உலக சாம்பியன்கள் PHOTOS

ODI உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் அணி, இன்று PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. PM மோடியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்திய வீராங்கனைகள், ‘Namo’ என்ற பெயர் பொறித்த இந்திய ஜெர்சியையும் வழங்கினர். மேலே Swipe செய்து அந்த புகைப்படங்களை பாருங்கள்.
News November 6, 2025
இரவில் கட்சி தாவினார்.. பிஹாரில் எதிர்பாராத திருப்பம்

பிஹாரில் நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முங்கெர் தொகுதியின் ஜன் சுராஜ் வேட்பாளர் சஞ்சய் சிங், பாஜகவுக்கு தாவியுள்ளார். நேற்று மாலை 5 மணி வரை பாஜகவுக்கு எதிராக வீடு வீடாக ஓட்டு கேட்டவர், திடீரென கட்சி மாறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே NDA கூட்டணி, தனது வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயல்வதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 6, 2025
இரவில் லேட்டா தூங்கினால் இவ்வளவு ஆபத்தா?

இரவில் அதிக அளவிலான செயற்கை வெளிச்சத்தில் (மின்சார விளக்குகள்) இருப்பது, இதய நோய் ஆபத்தை அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிக நேரம் அதிக செயற்கை வெளிச்சத்தில் இருப்பது மூளையை அதிக அழுத்தத்துக்கு ஆளாக்குவதுடன், ரத்தக்குழாய்களை பாதித்து இதய நோய்க்கும் காரணமாகிறது. இரவில் வெளிச்சத்தில் அதிகநேரம் விழிப்பதால் 5 ஆண்டுகளில் 35%, 10 ஆண்டுகளில் 22% இதயநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறதாம்.


