News April 25, 2024
3 மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம்

வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 15, 2026
இன்று ஜல்லிக்கட்டில் இதை செய்தால் ₹2 லட்சம் பரிசு

அவனியாபுரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கினால் ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தோட்டா’ என்ற அந்த காளையை அடக்கும் காளையருக்கு இந்த பரிசு கிடைக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க மாநிலத் தலைவர் முடக்கத்தான் மணி இதனை அறிவித்துள்ளார். இதனால், வாடிவாசலில் துள்ளி வரும் காளையை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
News January 15, 2026
சற்றுமுன்: விஜய்யின் அடுத்த மெகா சம்பவம்!

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்த விஜய், அடுத்ததாக எந்த பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், EPS கோட்டையாக கருதப்படும் சேலத்தில்தான் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்ததும் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 15, 2026
பொங்கலன்று இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

தைப்பொங்கல் திருநாளான இன்று, இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செஞ்சிடாதீங்க *ஒற்றைப் பானையில் பொங்கல் வைக்கக்கூடாது. பால் பொங்கல், சர்க்கரை பொங்கல் என 2 பொங்கல் வைக்க வேண்டும் *தேவைக்கு அதிகமாக பொங்கல் செய்து அதனை குப்பையில் போடக்கூடாது *அசைவம் சாப்பிட வேண்டாம் *பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும் போது வெறும் பானையாக வைக்கக் கூடாது. கொஞ்சம் பாலும் தண்ணீரும் ஊற்றி அடுப்பில் வைக்கலாம். SHARE IT.


