News March 18, 2024
3 இலக்க OTP-யா? ரசிகர்கள் குழப்பம்

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 4, 2025
BREAKING: ஏவிஎம் சரவணன் காலமானார்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான AVM சரவணன் (86) காலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் தயாரித்தவர். குறிப்பாக, AVM தயாரிப்பில் உருவான ‘சிவாஜி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சரவணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 4, 2025
இந்திய மண்ணில் சாதனை படைத்த ரோஹித்!

SA-வுக்கு எதிரான 2-வது ODI-ல் 14 ரன்களில் அவுட்டானாலும், ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன்களை அடித்த வீரர்களின் லிஸ்ட்டில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (14,192 ரன்கள்) முதல் இடத்திலும், கோலி (12,475 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர். டிராவிட்டை (9,004 ரன்கள்) முந்தி ரோஹித் சர்மா (9,005 ரன்கள்) 3-வது இடத்தில் முன்னேறியுள்ளார்.
News December 4, 2025
மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.


