News August 6, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து சனி, ஞாயிறு (ஆக.16 & 17) என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், பலரும் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க புக் பண்ணீட்டீங்களா?
Similar News
News August 7, 2025
கணவருக்கு ‘ராக்கி’ கட்டும் பெண்கள்!

இந்தியாவில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல வித்தியாச கலாச்சார நடைமுறைகளில் இதுவும் ஒன்று. ராக்கி என்றால் சகோதரன்-சகோதரி பாசம் நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால், இன்றளவும் ம.பி.யின் சிண்ட்வாரா மாவட்டத்தில் கோண்டி சமூக பெண்கள் தங்கள் கணவர்களுக்கே ராக்கி கட்டுகிறார்கள். தங்களை பாதுகாப்பவரை கெளரவிக்கும் விதமாக அப்பகுதி மக்களின் இந்த வழக்கம் உள்ளது. வியப்பாக உள்ளது அல்லவா!
News August 7, 2025
தேர்தல் கருத்துக்கணிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன், பின் கருத்துக்கணிப்புகளும், உண்மையான தேர்தல் முடிவும் ஒன்றுக்கொன்று வேறுபடுவதாக ராகுல் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சாதகமாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட அளவில் <<17330689>>போலி வாக்காளர்கள்<<>> சேர்க்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பது வழக்கம்; ஆனால், பாஜகவுக்கு மட்டும் விதிவிலக்காக இருப்பது எப்படி என்று அடுக்கடுக்கான <<17330451>>கேள்விகளை<<>> எழுப்பி வருகிறார்.
News August 7, 2025
உலகம் அழியப் போகிறதா… பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்

எதிர்காலத்தில் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிர்கள் வாழமுடியாத நிலை ஏற்படலாம் என ஜியார்ஜியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூரியனின் பிரகாசம் மேலும் அதிகரிக்கும் போது, அது ஆக்சிஜனின் அடர்த்தியை குறைக்கும். இதனால் அடுத்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆக்சிஜன் குறைய தொடங்கும். அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், இப்போதுள்ள அளவில் 10% மட்டுமே இருக்குமாம். அதுவரை பூமியில் மனித இனம் இருக்குமா?