News April 14, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Similar News
News December 17, 2025
IMDb தரவரிசையில் இடம்பிடித்த இந்திய டிவி சீரிஸ்

டிவி சீரிஸ் ரசிகரா நீங்க? அப்படினா நீங்க இந்த சீரிஸ் எல்லாம் பாத்துருக்கீங்களா? சமீபத்தில், பயனர்களின் ரேட்டிங் அடிப்படையில் இதுவரை வெளிவந்ததில் சிறந்த 250 டிவி சீரிஸ் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இதில், இந்திய தொடர்களும் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 17, 2025
IND vs SA: 4-வது டி20 போட்டி ரத்து

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெற இருந்த லக்னோ மைதானத்தில் அதீத பனிப்பொழிவு நிலவியதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதனால், கடைசி போட்டியில் இந்தியா வென்றால், தொடரை கைப்பற்றும். தோற்றால் தொடர் சமன்செய்யப்படும்.
News December 17, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.


