News August 3, 2024
வயநாட்டில் 3 நாள்கள் இலவச சேவை: BSNL

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில், 3 நாள்களுக்கு இலவச சேவை வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி நிகழ்ந்த பேரழிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இந்நிலையில், வயநாடு மாவட்டம், நிலம்பூர் தாலுகாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும் என BSNL தெரிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் பண்றீங்களா?

ஐஸ் க்யூப்களை வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துக்காது, டாக்டரின் ஒப்புதலுடன் கொடுக்கலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.
News November 16, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது unofficial ODI-ல் இந்தியா A 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த SA, 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிஷாந்த் சிந்து 4 விக்கெட், ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ருதுராஜ் அரைசதம் விளாசிட, 133 ரன்கள் இலக்கு 27.5 ஓவர்களில் சேஸ் செய்யப்பட்டது.
News November 16, 2025
பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

பிரண்டையில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது. *சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் குணமாகும் *மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலிக்கு சிறந்த மருந்து *செரிமான சக்தியை அதிகரிக்கும் *ரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் *பிரண்டையில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி நிறைந்தது.


