News October 23, 2024
இந்த மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மருதுபாண்டியர் நினைவு தினம் – தேவர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அக்.27,28,29இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. வழக்கமாக அக்.30 வரை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் அளிக்கப்படும். ஆனால் இந்த முறை, தீபாவளி வருவதால் அக்.30 டாஸ்மாக்கை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News January 12, 2026
இரவிலும் மழை பெய்யும்

குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
டெல்லியில் காங்., தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா?

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் திமுகவுக்கு ஒருபுறம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சும் தொடர்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யிடம் பேசலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பு ராகுலிடம் ஆலோசித்துள்ளனர். ஆனால், இப்போது பேச வேண்டாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கட்சியினருக்கு ராகுல் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தியுள்ளாராம்.
News January 12, 2026
‘வா வாத்தியார்’ ரிலீசில் நீடிக்கும் சிக்கல்

பொங்கல் விருந்தாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார். ₹21 கோடி கடன் பிரச்னை காரணமாக பட ரிலீசிற்கு மெட்ராஸ் HC தடைவிதிக்க, இன்று ₹3.75 கோடி தொகையை அவர் திருப்பி செலுத்தினார். இதையடுத்து ரிலீசிற்கு விதித்த தடையை நீக்குமாறு வாதிடப்பட்ட நிலையில், முழுத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதனால் வா வாத்தியார் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.


