News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.
Similar News
News September 1, 2025
தம்பதிகளே… இதுக்கு மட்டும் கூச்சப்படாதீங்க!

கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீங்க. ஈகோ, கோபம் எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவன் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.
News September 1, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா(2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இந்த ஆஃபர் நேற்றுடன் (ஆக.31) நிறைவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 1, 2025
முதல்வரின் வெளிநாடு பயணம்: நயினார் சாடல்

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் தமிழகம் போன்ற அதிக GDP கொண்ட மாநிலத்திற்கு, ₹ 3,200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே என தெரிவித்துள்ளார். 6 முறை பயணத்தில் ₹ 18,000 கோடி முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளதாகவும், 95% ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே நின்றுவிட்டதாகவும், இது மக்கள் பணத்தில் நடக்கும் மோசடி என அவர் சாடியுள்ளார்.