News October 4, 2024

3 நாள் தொடர் விடுமுறை.. ஊருக்கு செல்ல ரெடியா?

image

அக்.11 ஆயுத பூஜை, அக்.12 சரஸ்வதி பூஜை மற்றும் அக்.12 ஞாயிறு என அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கும், மற்ற நகரங்களில் இருந்தும் அக்.9,10இல் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம்.

Similar News

News August 28, 2025

வியாழக்கிழமையில் குரு பகவானின் முழு அருள் பெற..

image

மந்திரம்:
குணமிகு வியாழ குரு பகவானே!
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா!
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில், இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி என்றும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

News August 28, 2025

அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

image

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.

News August 28, 2025

லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!