News June 22, 2024
உலகிலேயே மிகப்பெரிய 3 இந்து கோயில்கள்

கம்போடியாவின் அங்கோர்வார் வாட்டில் உள்ள விஷ்ணு கோயில், 16.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகிலேயே இக்கோயில்தான் மிகப்பெரிய இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து 2வது பெரிய கோயிலாக அமெரிக்காவில் உள்ள சுவாமிநாராயண் அக்சார்தாம் கோயிலும் ( 6.55 லட்சம் சதுர மீட்டர்), 3ஆவது மிகப்பெரிய கோயிலாக ஸ்ரீரெங்கம் கோயிலும் (6.31 லட்சம் சதுர மீட்டர்) கருதப்படுகிறது.
Similar News
News November 16, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ₹2000?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹2000 வழங்க அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. DMK ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் கொரோனா காரணமாக பரிசு தொகை வழங்கப்படவில்லை. 2023, 2024-ல் ₹1000 வழங்கப்பட்டது. ஆனால், 2025 பொங்கலுக்கு வெறும் பொருள்களை மட்டும் வழங்கியதால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் 2026-ல் தேர்தல் வருவதால் DMK அரசு பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
News November 16, 2025
20 தொகுதிகளை குறிவைக்கும் DMK, ADMK

2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளில் அதிமுக, திமுக கவனம் செலுத்துகின்றன. தென்காசி, மொடக்குறிச்சி, தி.நகர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் ADMK – DMK இடையே வெறும் 1000-க்குள் தான் வாக்கு வித்தியாசம். அதேபோல், தாராபுரம், கோவை தெற்கு உள்ளிட்ட 10 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 2000-க்குள். இதனால், இந்த 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு கட்சிகளும் உள்ளன.
News November 16, 2025
₹44.34 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்

அவதூறு விவகாரத்தில் டிரம்ப்பிடம் <<18247624>>பிபிசி மன்னிப்பு<<>> கோரியிருந்தது. இருப்பினும், இவ்விவகாரத்தில் அந்நிறுவனத்தை டிரம்ப் சும்மா விடுவதாக இல்லை என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், பொதுமக்களை ஏமாற்றியதற்காக பிபிசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தன் கடமை என கூறியுள்ளார். மேலும், அவர்களிடம் ₹44.34 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


