News February 25, 2025
3 வங்கிகள் வட்டியை குறைத்தன

வீட்டு, வாகன கடனுக்கான வட்டியை இதுவரை 3 வங்கிகள் குறைத்துள்ளன. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து எஸ்பிஐ, பிஎன்பி ஆகிய வங்கிகள், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை அண்மையில் 0.25% குறைத்தன. இதையடுத்து தற்போது பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா (BOM) வங்கியும் வட்டியை 0.25% குறைத்துள்ளது. வீட்டுக்கடன் வட்டியை 8.10%, வாகன கடன் வட்டியை 8.45%ஆகக் குறைத்துள்ளது.
Similar News
News February 25, 2025
300 பேரை பலாத்காரம் செய்த டாக்டர்

பிரான்ஸில் 300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் ஜோயல் லீ ஸ்குவார்நெக் மீதான விசாரணையை அந்நாட்டு கோர்ட் தொடங்கியுள்ளது. 1989-2014 காலகட்டத்தில், நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், செக்-அப்பின் போதும் இந்த கொடுஞ்செயலை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 256 பேர் சிறுவர்கள். அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் வழக்காக கருதப்படும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 25, 2025
செமி ஃபைனலில் IND யாருடன் மோதும்?

குரூப் ஏ பிரிவில் IND அணி முதலிடத்தில் இருந்தால், குரூப் பி பிரிவில் 2ஆவது இடத்தில் இருக்கும் AUS அணியை CT செமி ஃபைனலில் எதிர்கொள்ளும். ஒருவேளை, 2ஆம் இடத்தை பிடித்தால், குரூப் பி-இல் முதலிடத்தில் இருக்கும் SAவுடன் மோத நேரிடும். இன்னும் சில போட்டிகள் மிச்சமிருந்தாலும், IND மேற்கூறிய 2 அணிகளில் ஏதாவது ஒன்றை தான் எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ENGஐ எதிர்கொள்ளும்.
News February 25, 2025
ரஷ்ய அதிபர் சர்வாதிகாரி அல்ல: டிரம்ப்

உக்ரைனில் அதிபர் தேர்தலை நடத்தாத ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி எனக் கூறிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் சர்வாதிகாரி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் உடனான போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட பிறகு ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் உடன்படிக்கை எட்டப்படும் எனவும், இது நீடித்தால், அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்