News November 17, 2025

3.8 கிலோ கஞ்சா பதுக்கிய மூன்று பேர் கைது

image

தூத்துக்குடி மடத்தூர் சோரீஸ்புரத்தில் உள்ள லாரி செட் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3. 8 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் தெரு அரிகிருஷ்ணன், ரவிக்குமார், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 16, 2025

மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி பலி

image

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் கனகலிங்கம்(40). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் மின் சுவிட்சை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

தூத்துக்குடி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

image

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளின் வசிக்கும் மக்கள் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!