News April 10, 2024
அரசுப் பள்ளிகளில் 3.20 லட்சம் மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1 முதல் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
Similar News
News January 19, 2026
பாஜக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? தமிழிசை

தமிழுக்கு எதிரான கட்சி என விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக <<18891828>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு <<>>தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடித்தட்டு மக்களுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும் விதமாகவும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற கூடியதாகவும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
ராசி பலன்கள் (19.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 19, 2026
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், திவ்யா கணேசன் டைட்டில் வின்னராக உருவெடுத்துள்ளார். 28-வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த இவர், வீட்டில் நடந்த பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸில் மகுடம் சூடியுள்ளார். இவரது திறமைக்கு விரைவிலேயே கோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.


