News December 14, 2025
3-வது டி20: இந்திய அணி பவுலிங்

தரம்சாலாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20-ல், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. IND அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்சர் படேல், பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டி20-ல் IND 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் SA 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
Similar News
News March 27, 2026
சுவையாக இருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகலாம்!

நீங்கள் கட்டுப்பாடின்றி பாஸ்ட் புட் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா? இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஸ்ட் புட் வகை உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக IJMR ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் புட் உணவு வகைகளால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளது.
News March 27, 2026
620 இடங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள்: நிதின் கட்கரி

நாட்டின் 120 மாவட்டங்கள் மற்றும் 500 வட்டாரங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் இவை தொடங்கப்படும் என்றும் இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே 200 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளைத் திறந்துள்ளதாகவும் கூறினார்.
News March 27, 2026
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

▶வாழ்க்கை வேடிக்கையாக இல்லாவிட்டால் அது சோகமாகிவிடும். ▶நுண்ணறிவு என்பது மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.
▶அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, அறிவு எனும் மாயையே. ▶உங்கள் கால்களைப் பார்க்காமல் நட்சத்திரங்களைப் பாருங்கள்.
▶வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றிபெறக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்.


