News November 9, 2025
3 முறைக்கு மேல் Oil-ஐ யூஸ் பண்ணால் ₹1 லட்சம் அபராதம்!

Chat உணவுகள் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், பல இடங்களிலும் இந்த Chat உணவுகளை தயாரிக்க, ஒரே எண்ணெய்யை பலமுறைக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அது உடல்நலத்திற்கு பல தீமைகள் ஏற்படுத்துகிறது. இதனால், கடைகளில் இப்படி பயன்படுத்தும் எண்ணெய்களை 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை கேரள அரசு கொண்டுவந்துள்ளது. நல்ல சட்டம்.. நம்மூரிலும் கொண்டுவரலாம் அல்லவா?
Similar News
News November 9, 2025
ஏன் எல்லாவற்றையும் கேட்டு பெறுகிறார் டிரம்ப்?

USA-வின் வாஷிங்டனில் கட்டமைக்கப்படவுள்ள ஸ்டேடியத்திற்கு தனது பெயரை வைக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் விளையாட்டு வீரர் இல்லை என்பதால் குழுவினர் அவரது பெயரை வைக்க தயங்குகின்றனராம். முன்னதாக 7 போர்களை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வேண்டும் என கேட்டார். இதனால் ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு ஏன் இப்படி அனைத்தையும் அவராகவே கேட்டு பெறுகிறார் என மக்கள் விமர்சித்துவருகின்றனர்.
News November 9, 2025
மாதுளையை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

பழங்களிலேயே ஒரு பொக்கிஷமாக கருதப்படுவது மாதுளை பழம். இதை நீங்கள் ஒரு மாதம் தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று தெரியுமா? *இதயம் வலுப்பெறும் *சருமம் பளபளக்கும் *உடலில் வீக்கம் குறையும் *மூளை கூர்மையாக இருக்கும் *குடல் ஆரோக்கியமாகும் *சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் *உடற்பயிற்சிக்கு பிறகு விரைவான மீட்சி *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *சிறுநீரக செயல்பாடு மேம்படும் *உடல் எடை குறையும்.
News November 9, 2025
SHOCKING: ஜடேஜாவை கொடுத்து சஞ்சுவை வாங்கும் CSK?

வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான Mini auction-க்கு முன்பாக வீரர்களின் Trade சூடுபிடித்துள்ளது. RR கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்கும் முயற்சியில் CSK தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஷாக்கிங் செய்தி ஒன்றும் வெளிவந்துள்ளது. ஆம், சஞ்சு சாம்சனை வாங்க, ஜடேஜாவை RR அணிக்கு CSK வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சரியான முடிவு என நீங்கள் நினைக்குறீங்களா?


