News November 11, 2025
3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வது? தேஜஸ்வி

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
News November 11, 2025
ஏன் வீட்டில் ஒற்றை ஊதுபத்தி ஏற்றி வைக்கக்கூடாது?

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News November 11, 2025
தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

SIR-ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, சண்முகம், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவிற்கு எதிரான வாக்குகளை நீக்கவே SIR கொண்டு வரப்படுவதாக திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.


