News August 31, 2024

3 மாதம் தமிழகம் நிம்மதியாக இருக்கும்: ஆர்.பி.உதயகுமார்

image

அண்ணாமலை வெளிநாடு சென்றதால் அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகம் நிம்மதியாக இருக்கும் என EX அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி, தொழில், ரயில்வே திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதைப் பற்றி கேள்வி எழுப்ப தமிழக பாஜகவினர் தயாராக இல்லை எனவும் விமர்சித்தார். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே தரவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 20, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

image

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அதாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும். ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

திமுகவில் இணையும் மல்லை சத்யா?

image

துரை வைகோ உடனான மோதலைத் தொடர்ந்து, மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். பெரியார், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சத்யா, உட்கட்சி மோதல் வெடித்தபோதும், வைகோவை ‘தலைவர்’! என்றே குறிப்பிட்டு வந்தார். தற்போது கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதால், அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

News August 20, 2025

கூலி படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்

image

கூலி படத்திலிருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கூலி திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இருந்து கட் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்க தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் U/A சான்று கேட்டு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. U/A கிடைக்குமா ?

error: Content is protected !!