News April 25, 2024
3 பேர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று திரியாலம் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதன் ராஜ் உள்பட 3 இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு இந்த வழியாக யாரும் செல்ல கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர். இவர்கள் 3 பேர் மீது ஜோலார்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
திருப்பத்தூர்: வெயில்த் தாங்க முடியலையா…? இங்க போங்க

திருப்பத்தூரில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிகள், இந்த இயற்கை அதிசயமானது 50 அடி உயரத்திலிருந்து கீழே விழும் நீரின் மூச்சடைக்கக்கூடிய அடுக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பசுமையான காடுகள், மலைகளிலுள்ள பறவைகளின் இனிமையான இசையால் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆச்சிரியம் தரும். கோடைகாலத்தில் குளிர்ச்சியான இடத்திற்கு போக நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 19, 2025
ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு