News May 1, 2024

 3 பேர் அதிரடி கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Similar News

News August 25, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பிறகு முறையாக Log Out செய்வது நன்று. பொதுமக்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

திருப்பத்தூர்: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!