News February 5, 2026
3 நாள் STOP பண்ணுங்க.. அதிசயம் நடக்கும்!

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?
Similar News
News February 13, 2026
கவர்னராகிறாரா ஓபிஎஸ்? அரசியலில் திருப்பம்

கொங்கு & முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியாமல் கிடைக்க, EPS உடன் OPS-ஐ அதிமுக கூட்டணியில் இணைய வேண்டுமென பாஜக நினைக்கிறது. இதற்கு EPS மறுப்பதால், OPS-க்கு கவர்னர் பதவி அளிக்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு EPS-ம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என பாஜக மேலிடம் கணக்கு போடுகிறதாம். இது சாத்தியமானால், அவர் மணிப்பூர் (அ) மகாராஷ்டிரா கவர்னராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 13, 2026
பிஹார் ஃபார்முலாவை திமுக கையில் எடுத்துள்ளதா?

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாக கூறப்படுவது எது தெரியுமா? பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் ₹10,000-ஐ தேர்தலுக்கு முன்பே வழங்கியது தான். மத்தியில் பாஜக ஆள்வதால் நிதிஷுக்கு அது சாத்தியமானது. இந்நிலையில், தமிழக நிதிநிலை அவ்வளவு பெரிய தொகைக்கு இடம் தராது என்பதால் மகளிர் உரிமைத் தொகை பெயரில் ₹5,000-ஐ அரசு வழங்கியுள்ளதா என விமர்சகர்கள் கேட்கின்றனர்.
News February 13, 2026
விசில் பயத்தால் மகளிருக்கு ₹2,000.. விஜய் அதிரடி

தன்னுடைய அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த உரிமைத் தொகையை சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள் என விஜய் பதிவிட்டுள்ளார். புதிதாக கோடைகால சிறப்புத் தொகை ₹2,000 என திடீரென அறிவித்தது எப்படி என கேள்வி எழுப்பிய அவர், இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்றும் சாடியுள்ளார். திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்காக, திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் TN மகளிருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.


