News February 27, 2026
3 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. HAPPY

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது. மேலும், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு, அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Similar News
News April 3, 2026
டெல்லி தலைமைக்கு டிமாண்ட் வைத்த அண்ணாமலை ?

தமிழ்நாடு பாஜக தலைமையோடு முரண்பாடு ஏற்பட்டதால், அண்ணாமலையை டெல்லி தலைமை தொடர்ந்து சமரசம் செய்து வருகிறதாம். இந்நிலையில், கோவை வடக்கு தவிர வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்றும், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் எனவும் டெல்லி தலைமையிடம் அண்ணாமலை உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
நூடுல்ஸால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமா?

இன்ஸ்டான்ட் நூடுல்ஸால், குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படலாம் என்கிறார்கள். ஆம், இந்தியாவில் விற்கப்படும் பல நூடுல்ஸ்களில் US, ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் அதீத சோடியம், Empty கலோரிகள்(சத்து குறைவு, மைதா அதிகம்) உள்ளன. இதனால் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஆசைக்கு மாசம் ஒருமுறை சாப்பிடலாமாம்.
News April 3, 2026
ஈரானுடன் 7 ஆண்டுகளுக்கு பின் டீல் பேசிய இந்தியா

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளது. அதன்படி, சுமார் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஏப்.4-ம் தேதி குஜராத் துறைமுகம் வந்தடைகிறது. 2019 வரை ஆண்டுக்கு சுமார் 23–24 மில்லியன் டன் எண்ணெய்யை ஈரானிடம் இருந்து இந்தியா வாங்கியது. அதன்பிறகு ஈரான் மீது USA பொருளாதார தடைவிதித்ததால், இந்தியா அங்கிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது.


