News December 22, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. HAPPY NEWS

புத்தாண்டு (ஜன.1) வியாழன் அன்று பிறப்பதால், வெள்ளி ஒரு நாள் லீவ் போட்டால், 4 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அதேபோல், பொங்கலும் (ஜன.15) வியாழன் அன்று தொடங்குவதால், ஞாயிறு வரை 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம் (ஜன.26) திங்கள் அன்று வருவதால், அதற்கு முந்தைய சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதற்கேற்ப உங்கள் பயணங்களை திட்டமிடுங்கள்.
Similar News
News December 24, 2025
மீண்டும் களத்தில் Ro-Ko!

இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் ரோஹித் & கோலி உள்ளூர் போட்டிகளுக்கு திரும்புகின்றனர். விஜய் ஹசாரே தொடரில், டெல்லி அணிக்காக கோலியும், மும்பை அணிக்காக ரோஹித்தும் களமிறங்கியுள்ளனர். டெல்லி அணி ஆந்திராவையும், மும்பை அணி சிக்கிம் அணியையும் எதிர்கொள்கிறது. ரோஹித் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்தும், கோலி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 24, 2025
செங்கோட்டையனுக்கு ஏமாற்றம்

தவெகவில் இணைந்த பிறகு அதிமுக EX அமைச்சர்கள் சிலரை கட்சியில் இணைக்க KAS பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஈரோடு பரப்புரை மேடையில் விஜய் முன்னிலையில் சிலர் இணைய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 24, 2025
பச்சிளம் குழந்தையின் கொலைக்கு டிரம்ப் சாட்சியா?

<<18548710>>எப்ஸ்டீன்<<>> வழக்கில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆவணம் உலகையே அதிர வைத்துள்ளது. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 1984-ல் தனக்கு 13 வயதாக இருந்தபோது பாலியல் கடத்தலுக்கு ஆளானதாகவும், அப்போது தனக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் புகாரளித்துள்ளார். இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அந்த கொலை நடந்த இடத்தில் டிரம்ப் இருந்ததாக அவர் கூறியுள்ளது புயலை கிளப்பியுள்ளது.


