News June 16, 2024
3 ஆண்டுகளாக முடங்கிய ஆவின் பாலகம்

சிவகாசி மாநகராட்சி பகுதிகளான திருத்தங்கல் பேருந்து நிலையம், எம்எல்ஏ அலுவலகம், பழைய விருதுநகர் சாலை, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகம் ஒரு நாள் கூட செயல்படாமல் தற்போது வரை பூட்டியே கிடப்பதாக கூறும் பொதுமக்கள் இதனால் ஆவின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என புலம்புகின்றனர் .
Similar News
News August 20, 2025
கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News August 20, 2025
இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆத்திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
News August 20, 2025
BREAKING: விருதுநகரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரையில் நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள எலியார்றுபத்தி , வலையங்குளம், காரியாபட்டி இந்த இடங்களில் நாளை நடைபெறும் மாநாட்டினால் மதுரை-தூத்துக்குடி சாலையில் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது.இதனால் அந்த இடத்தை சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.