News May 7, 2025
3 மாதங்களில் 19 விபத்துகள்: 3 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 2, 2025
திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 2, 2025
திருவள்ளூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.