News April 19, 2025
3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.
News November 23, 2025
சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


