News March 19, 2025

3 கொலையாளிகள் சுட்டுப் பிடிப்பு

image

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் இன்று கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேர் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு கொலையாளி கார்த்திகேயன் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார்.

Similar News

News March 20, 2025

சேலம் கோட்டத்தின் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (மார்ச் 21) முதல் மார்ச் 24- ஆம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

மாற்றுத்திறனாளி கல்லால் தாக்கி கொலை: 2 பேர் கைது 

image

இடைப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான அங்கமுத்து (45). இவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு டாஸ்மாக் பாரியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள் அவரிடம் மது அருந்த பணம் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அங்கமுத்துவை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, தன பிரபு, பேரரசு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

News March 20, 2025

வித்யா வீரப்பனுக்கு நா.த.க.வில் புதிய பொறுப்பு

image

சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) , நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

error: Content is protected !!