News March 10, 2025

3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

image

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு அமர்ந்து தர்ணாவில் இன்று ஈடுபட்டார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அருகில் வசிக்கும் நபர் ஒருவர் மது குடித்து வந்து தினமும் தொல்லை செய்கிறார். தனியாக வாழும் எனக்கு பாதுகாப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்

Similar News

News March 11, 2025

சேலம்: இதை செய்யலனா ரேஷன் அட்டை கேன்சல் ஆகிடும்

image

கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 10, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இரவு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 10, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 10 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!