News June 4, 2024
3வது சுற்றில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு முன்னிலை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 31,999 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 17,830 வாக்குகளும், நாதக வேட்பாளர் 17,031 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 50,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News September 27, 2025
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
News September 26, 2025
சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News September 26, 2025
செங்கல்பட்டு வரும் விஜய்

தவெக தலைவர் விஜய் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் அக்.25ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக பிப்ரவரி-21-2026 ம் தேதி சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (SHARE)