News February 2, 2025

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா

image

தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது, அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் சிலைகளை, இன்று காலை 10 மணிக்கு விஜய் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 2, 2026

FLASH: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $66 உயர்ந்து $5,344-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை $3 குறைந்து $90-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று இந்திய சந்தையில் குறைந்திருந்த தங்கம் விலை நாளை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

News March 2, 2026

கடந்தாண்டை விட இந்தாண்டு வெயில் வாட்டி வதைக்கும்!

image

வாட்டி வதைக்கும் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் வானிலை நிபுணர்களின் எச்சரிக்கை அதிர வைத்துள்ளது. இந்தாண்டு கோடைக்காலம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்றும், ஜூன் முதல் படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை உயர்ந்து <<13058352>>அக்டோபரில் EL-NINO நோக்கி நகரும்<<>> என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் TN-ல் வெப்பத்தின் தாக்கம் மார்ச், ஏப்ரல் மாதங்களை விட மே, ஜூனில் உச்சம் தொடும் என கூறியுள்ளனர்.

News March 2, 2026

தாக்குதலில் கமேனியின் மனைவி மரணம்

image

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கமேனியின் மனைவி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிப்.28-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த கமேனியின் மனைவி மன்சூர் கோஜஸ்தே பாகர்சாதே கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 1964-ம் ஆண்டு தனது 17 வயதில் கமேனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

error: Content is protected !!