News August 20, 2025

2-வது மனைவி Trip.. குழப்பும் மாதம்பட்டி ரங்கராஜ்?

image

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக ஜாய் கிரிஸில்டா X தளத்தில் பதிவிட்டார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், சில நாள்கள் முன்பு, ரங்கராஜ் தன் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட <<17386595>>போட்டோஸ் <<>>வைரலானது. இதுவே குழப்பமாக இருந்த நிலையில், ரங்கராஜுடன் Trip சென்றுள்ள வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். புரியலயே?

Similar News

News August 20, 2025

டெல்லி CM கன்னத்தில் அறைந்தவர் இவர்தான் (PHOTO)

image

டெல்லி CM மீது தாக்குதல் நடத்தியது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, CM ரேகா குப்தாவுக்கும், ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் பாய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜேஷ், ரேகா குப்தாவின் கன்னத்தில் அறைந்து, அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். தற்போது, அவரின் PHOTO வெளியாகியுள்ளது.

News August 20, 2025

நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்

image

சமீப காலங்களில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இயக்குநர்கள் மொழிகளைக் கடந்து நல்ல திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில், நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குநர் ஆவார். முன்னதாக தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் ரட்சகன், பயணம் ஆகிய படங்களிலும் நாகர்ஜுனா நடித்துள்ளார். இறுதியாக கூலி படத்திலும் அவர் மிரட்டியிருந்தார்.

News August 20, 2025

தங்கம் விலை இதுவரை ₹2,120 குறைந்தது

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த 10 நாள்களில் ஒருநாள் கூட உயரவில்லை. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹2,120 வரை குறைந்து இன்று ₹73,440க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை நேற்று ₹1000, இன்று ₹1000 என 2 நாளில் ₹2000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!