News March 20, 2025
அரசுக் கல்லூரிகளில் 2வது ஷிப்ட் அறிமுகம்

TNல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில், 100 இடங்கள் மட்டுமே உள்ள சில படிப்புகளுக்கு 2,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு இந்தாண்டு முதல் 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், 2ம் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஆசிரியர்களை கூடுதலாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Similar News
News March 20, 2025
என் பேச்சை சரியாக புரிந்து கொள்ளவில்லை: வேல்முருகன்

தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல் அவையில் பேசுவதாக தவாக தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சை அமைச்சர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் வரை தவறாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்றே தான் பேசியதாக விளக்கமளித்தார். மேலும், <<15824134>>சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும்<<>>, அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 20, 2025
பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லாது: டி வில்லியர்ஸ்

சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறாது என டி வில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளே இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ரசிகர்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 20, 2025
ஏப்ரலில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை

ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வரும் ஏப்ரலில் வங்கிகளுக்கு, தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. •ஏப்ரல் 6- ராம நவமி •ஏப்ரல் 10- மகாவீர் ஜெயந்தி. •ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு •ஏப்.18 – புனித வெள்ளி. தவிர 4 ஞாயிறு, 2 & 4ஆம் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாரம் 5 நாட்கள் வேலைநாள் அமலுக்கு வந்தால் மேலும் 2 நாள் விடுமுறை அதிகரிக்கும்.