News June 26, 2024
சூரஜ் மீது 2ஆவது பாலியல் வழக்கு

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா மீது 2ஆவது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது கட்சி நிர்வாகியை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த திங்கள் கிழமை 8 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
Similar News
News March 8, 2026
பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT


