News September 1, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா(2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இந்த ஆஃபர் நேற்றுடன் (ஆக.31) நிறைவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
ஒரே அறையில் தனித்தனியாக படுக்கும் தம்பதியர்

நல்ல தூக்கத்துக்காக ‘தனியாக தூங்கும்’ முறையை ஜப்பானிய தம்பதியர் பின்பற்ற தொடங்கியுள்ளனராம். ஒரே அறையில் தனித்தனியான படுக்கைகளில் கணவன்- மனைவி படுத்து உறங்குகின்றனர். துணைவரின் குறட்டை சத்தத்தால் இருவரின் தூக்கமும் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த ஏற்பாடாம். ஆனால், இது நெருக்கத்தை குறைப்பதாக ஒருசாரார் விமர்சிக்க, ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமா என நெட்டிசன்களும் கேட்கின்றனர்.
News September 2, 2025
திருடுவதை வழக்கமாக்கியுள்ள PM மோடி: கார்கே

அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு கவிழும் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஏழைகள், பெண்களுக்காக பணியாற்றும் அரசு விரைவில் அமையும் என்றும் அவர் கூறினார். பிஹாரில் நடைபெற்றுவரும் பேரணியில் பேசிய அவர், PM மோடி திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக விமர்சித்தார். வாக்குகளை திருடும் அவர், வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை காப்பதன் வாயிலாக பணத்தை திருடுகிறார் என்று கடுமையாக சாடினார்.
News September 2, 2025
10 வாரங்களில் கதையை மாற்றிய இந்தியா!

கடந்த ஜூன் 26-ம் தேதி சீனாவில் நடைபெற்ற SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் ராஜ்நாத் சிங்கும் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், இன்று அதே SCO மாநாட்டு பிரகடனத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானும் கையெழுத்திட்டிருந்தது. இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.