News November 5, 2024

292 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பொதுமக்களிடம் இருந்து 292 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Similar News

News November 20, 2024

விவசாயிகளுக்கு குட்டை ரக தென்னங்கன்றுகள் 

image

பிச்சவாக்கதில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலையின் கீழ் இயங்கி வரும் மாநில தென்னை கன்று பண்ணையில் குட்டை ரக தென்னங்கன்றுகள் ரூ.125 க்கு கிடைக்கும் என்றும், தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தோட்டக்கலை அதிகாரிகள் செல்வி நந்தினி 8940235542 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் 9994611566 அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

News November 20, 2024

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5.80 லட்சம் விருது தொகை. 2025ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர், விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/1 இணையதளத்தில் (அ) காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம் என அறிவிப்பு.

News November 19, 2024

ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி தற்கொலை

image

பரந்தூர் சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி திவ்யா கணபதி, நேற்று மாலை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய சுங்குவாசத்திரம் போலீசார், தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.