News January 17, 2026

28 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக

image

<<18877155>>மஹாராஷ்டிராவில்<<>> நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரேக்களின் கோட்டையாக கருதப்பட்ட மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 1996 முதல் தாக்கரே சிவசேனாவின் மேயரே மும்பையை ஆண்டு வந்த நிலையில், இனி பாஜக மேயர் செங்கோல் ஏந்த உள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக கூட்டணி 118, சிவசேனா (தாக்கரே) 65 இடங்களில் வென்றுள்ளது.

Similar News

News February 8, 2026

தமிழர் பெருமையை பறைசாற்றிய மோடிக்கு நன்றி

image

மலேசியாவில் தமிழ் மரபை போற்றிய மோடிக்கு நயினார் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் கலாசாரம் உலகமயமானது என போற்றியதோடு, தமிழ் தான் உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. தமிழ் இலக்கியத்தின் அழியாப் பெருமையை சுட்டிக்காட்டி, மலேசியாவில் திருவள்ளுவர் கலாசாரம் மையம் விரைவில் அமைக்கவிருப்பதையும் குறிப்பிட்டிருப்பது வரவேற்பிற்குரியது என்றார்.

News February 8, 2026

RSS யாருக்கும் எதிரானது அல்ல: மோகன் பகவத்

image

RSS பின்னணி கொண்ட சில தனிநபர்கள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக இருந்தாலும், இந்த அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என மோகன் பகவத் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற RSS நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், RSS யாருக்கும் எதிரானது அல்ல என தெரிவித்தார். RSS சங்கத்தைப் போல செயல்படும் அமைப்பு உலகில் வேறு எங்கும் கிடையாது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

News February 8, 2026

தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள்.. அடுத்த அறிவிப்பு

image

அதிமுக 2 கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், விரைவில் 3-ம் கட்ட வாக்குறுதியை EPS வெளியிட உள்ளார். அதில், பொள்ளாச்சி, கும்பகோணம், ஆத்தூர், விருத்தாசலம், பழனி, சிவகாசி மாவட்டங்களுக்கான அறிவிப்பு இடம் பெற உள்ளதாம். மக்களின் நீண்டநாள் கோரிக்கை என்பதால் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுக்க உள்ளது. பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் 10-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!