News October 8, 2025

பென்ஸ் கார்கள் நாளொன்றுக்கு 277 விற்பனை

image

GST சீர்திருத்தத்தால் விலை குறைந்ததன் காரணமாக, நவராத்திரியில் பிரீமியம் கார்களான மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளன. கடந்த 9 நாள்களில் 2,500 கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 277 கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கார்களின் சராசரி விலை ₹1 கோடியாகும். அதேபோல், கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 5119 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Similar News

News October 8, 2025

Recipe: தேங்காய் சாக்லேட் லட்டு செய்வது எப்படி?

image

வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவல் (அரை கப்) சேர்த்து வதக்கவும். அதில் காய்ச்சிய பசும்பாலை ஊற்றவும். பின் மில்க் மெய்ட், கோகோ தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இளகி பின் கெட்டியாகும். இப்பதம் வந்ததும் பொடித்த நட்ஸை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். இந்த கலவை ஆறியவுடன் கையில் சிறிது நெய் தடவி கொண்டு உருண்டையாகப் பிடித்தால் சுவையான தேங்காய் சாக்லேட் லட்டு ரெடி. SHARE IT.

News October 8, 2025

கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் வழங்கவுள்ளதா திமுக?

image

2026 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் உள்ளிட்ட ஆஃபர்களை அள்ளிவீச திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவை கைகாட்டி திமுக தலைமைக்கு காங்கிரஸ் பிரஷரை ஏற்றி வருகிறதாம். கூட்டணி உடையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் திமுக தலைமை, பிஹார் தேர்தல் முடிந்ததும், கூட்டணியை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க தீவிரம் காட்டி வருகிறதாம்.

News October 8, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை ₹90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹90,400-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுவதுபோல், விரைவில் தங்கம் விலை ₹1 லட்சத்தை எட்டிவிடும் என தெரிகிறது.

error: Content is protected !!