News August 11, 2025

₹44,900 சம்பளத்தில் RRBல் 272 காலியிடங்கள்!

image

RRB-ல் காலியாகவுள்ள 272 Nursing Superintendent பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 20- 43 வயதுக்குட்பட்ட B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். இதற்கு மாதச் சம்பளமாக ₹44,900 வழங்கப்படும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News August 11, 2025

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? EPS புதிய விளக்கம்

image

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், TN மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள்(ADMK – BJP) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

News August 11, 2025

தோல்வியால் அடாவடியில் இறங்கிய பாக்., அரசு

image

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் களத்தில் தோற்ற பாகிஸ்தான், இந்திய தூதரக ஊழியர்களிடம் அத்துமீறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்.கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அத்துமீறி நுழைவது, திடீர் சோதனை செய்வது என தொல்லை கொடுப்பதுடன், அத்தியாவசியமான கேஸ், தண்ணீர் சப்ளையை கூட தடுப்பதாக கூறப்படுகிறது. இது சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறானது என இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

News August 11, 2025

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு!

image

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பனையூரில் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய போராட்ட குழுவினர், விஜய் போராட்ட பந்தலுக்கு நேரில் வர விரும்பியதாகவும், ஆனால் டிராஃபிக் பிரச்னை ஏற்படும் என்பதால் தாங்கள் இங்கு வந்ததாகவும் கூறினர். மேலும், முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினர். இது DMK அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!