News August 31, 2025
27 விமானங்கள் லேட், 4 விமானங்கள் டேக் டைவர்சன்!

நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் 27 விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 12 விமானங்கள், சென்னையிலிருந்து புறப்படும் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத் விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
Similar News
News September 1, 2025
Tech: கூகுள் Storage-ஐ காலி செய்ய சிம்பிள் Tips..

உங்கள் ஃபோனில் கூகுள் Storage Full ஆகிவிட்டால், Extra Storage-காக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த சீக்ரெட் டிரிக்ஸை செய்தாலே Storage Clear ஆகும். Google Drive(Desktop)→Settings→manage apps→Hidden App Data→Delete செய்யுங்கள். 2வது வழி, Google Photos→Settings→Backup Quality→Storage Saver→Recover Storage என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்க. இப்படி செய்தாலே Storage Clear ஆகும். SHARE.
News September 1, 2025
NDA கூட்டணியில் அமமுக இல்லையா? டிடிவி சூசகம்

NDA கூட்டணியில் இருக்கிறீர்களா, இல்லையா? என்று டிடிவி-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த கேள்வியை நயினார் நாகேந்திரனிடமே கேளுங்கள்; அவர் பதிலளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும் என TTV தெரிவித்துள்ளார். OPS போலவே TTV-ஐ சேர்க்க முடியாது என்பதில் EPS விடாப்பிடியாக இருப்பதும், இதன்பின்னணியில் விஜய் தனி கூட்டணி அமைப்பது குறித்து TTV பேசியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 1, 2025
MP சசிகாந்த் செந்திலிடம் பேசிய ராகுல் காந்தி!

SSA கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும், MP சசிகாந்த் செந்திலிடம் ராகுல் காந்தி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் திருவள்ளூர் GH-ல் இருந்து சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலுக்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில், செல்வப்பெருந்தகை, துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.